/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கலைப்பண்பாட்டுத்துறை விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
/
கலைப்பண்பாட்டுத்துறை விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
கலைப்பண்பாட்டுத்துறை விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
கலைப்பண்பாட்டுத்துறை விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : நவ 13, 2024 05:44 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் கலைப்பண்பாட்டுத்துறை விருதுகளுக்கு விண்ணப்பிக்க எழுத்தாளர்களுக்கு, இயக்குநர் கலியபெருமாள் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கலை பண்பாட்டுத்துறையில், 2023ம் ஆண்டுக்கான கம்பன் புகழ் இலக்கிய விருது, நேரு குழந்தைகள் விருது மற்றும் தொல்காப்பியர் விருது வழங்கப்ட உள்ளது. இதற்கு எழுத்தாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கவிதை, சிறுகதை, நாடகம், புதினம் மற்றும் கட்டுரை போன்ற துறைகளில் வெளியிடப்பட்ட சிறந்த, 10 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு கம்பன் புகழ் இலக்கிய விருது வழங்கப்படுகிறது.
சிறுவர், சிறுமியர்களுக்கான அறிவியல், கலை, இலக்கியம், கலாசாரத்தை கற்பிக்கும் வகையில் உள்ள நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், பயணநுால், கட்டுரை தொகுப்பு போன்ற படைப்புகளில், இரண்டு சிறந்த சிறுவர் இலக்கிய படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, நேரு குழந்தைகள் இலக்கிய விருது மற்றும் தொல்காப்பியர் விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுகள் ஒவ்வொன்றிற்கும், ரூ.10 ஆயிரம் பண முடிப்பும், சான்றிதழும் வழங்கப்படும்.
கடந்த, 202,ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து டிச., 31ம் தேதி வரை வெளியிடப்பட்ட வெளியீடுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பங்களை வரும், 25ம் தேதிக்குள் கலை பண்பாட்டுத்துறையில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை நேரிலோ அல்லது https://art.py.gov.in, என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.