/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் துணை தேர்வாணையம் வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தல்
/
புதுச்சேரியில் துணை தேர்வாணையம் வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தல்
புதுச்சேரியில் துணை தேர்வாணையம் வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தல்
புதுச்சேரியில் துணை தேர்வாணையம் வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தல்
ADDED : மார் 29, 2025 03:48 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் துணை தேர்வாணையம் அமைக்க மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
அவர் லோக்சபாவில் பேசியதாவது:
தற்போதைய நிலையில், புதுச்சேரிக்கென தனி தேர்வு வாரியம் இல்லாத சூழலில், குரூப்--ஏ, குரூப்--பி பதவிகள் அனைத்தும் மத்திய தேர்வாணையத்தின் மூலமாக அகில இந்திய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால், புதுச்சேரி மக்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுகிறது.
நிறைய பணியிடங்களில் பிராந்திய மொழி அறியாத அதிகாரிகள் பல்வேறு நிலைகளில் நியமிக்கப்படுகின்றனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதி எண்- 315ன் படி அனைத்து மாநிலங்களிலும் தனி தேர்வாணையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், புதுச்சேரிக்கென தனி தேர்வாணையம் இல்லாத சூழ்நிலையில் மத்திய தேர்வாணையத்தின் மூலமாகத்தான் விரிவுரையாளர்களும் பள்ளி முதல்வர்களும் மருத்துவர்களும் நியமிக்கப்படுகின்றனர்.
புதுச்சேரிக்கென தனி தேர்வாணையம் இருக்கும் பட்சத்தில் பிராந்திய மொழி தெரிந்த அதிகாரிகளை நியமிக்க ஏதுவாக இருக்கும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் யூனியன் பிரதேசங்களில் தனித் தேர்வாணையம் அமைக்க வழிவகை செய்யாவிட்டாலும், தலைநகர் டில்லியில் தனி துணை தேர்வு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கென ஒரு தனி துணை தேர்வு வாரியம் அமைக்க மத்திய அரசு அனுமதி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.