/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வரின் துணை தனிச் செயலர் சாலை விபத்தில் உயிரிழப்பு
/
முதல்வரின் துணை தனிச் செயலர் சாலை விபத்தில் உயிரிழப்பு
முதல்வரின் துணை தனிச் செயலர் சாலை விபத்தில் உயிரிழப்பு
முதல்வரின் துணை தனிச் செயலர் சாலை விபத்தில் உயிரிழப்பு
ADDED : டிச 16, 2024 07:04 AM

புதுச்சேரி: பைக் விபத்தில் படுகாயம் அடைந்த முதல்வரின் துணை தனிச்செயலர் தமிழரிமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுச்சேரி மூலக்குளம், ராதாகிருஷ்ணன் நகர், 6வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் தமிழரிமா, 34; புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியின், துணைச் தனிச்செயலராக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த 8 ம் தேதி இரவு தமிழரிமா, தனது ஸ்கூட்டரில் காலாப்பட்டு சென்று இரவு வீடு திரும்பினார்.
நள்ளிரவு 1:00 மணிக்கு சின்ன காலாப்பட்டு கடற்கரை சாலையில் வடக்கில் இருந்துதெற்கு நோக்கி திரும்பினார். விமல் இன்ஜினியரிங் ஒர்க் ஷாப் அருகே வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் ஸ்கூட்டர் மீது மோதியதில் தலையில் பலத்த காயத்துடன் சாலையோரம் விழுந்தார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தமிழரிமாவை உடன் பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோமா நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தமிழரிமாவை முதல்வர் ரங்கசாமி நேரில் சந்தித்து உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார். இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

