தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போக்குவரத்து அதிகாரிகளுடன் துணை சபாநாயகர் ஆலோசனை

போக்குவரத்து அதிகாரிகளுடன் துணை சபாநாயகர் ஆலோசனை

போக்குவரத்து அதிகாரிகளுடன் துணை சபாநாயகர் ஆலோசனை


ADDED : ஜன 03, 2024 12:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2024 12:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கரையாம்புத்துார், மணமேடு கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் சட்டசபையில் நடந்தது.

புதுச்சேரி, நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மணமேடு, கரையாம்புத்துார், பனையடிக்குப்பம் ஆகிய பகுதிகளில் பஸ் வசதி இல்லாததால், பொதுமக்கள் அவதியுற்று வந்தனர். இப்பகுதியில் பஸ் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி துணை சபாநாயகர் ராஜவேலுவிடம் தொகுதி மக்கள் மனு அளித்தனர்.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் துணை சபாநாயகர் தலைமையில் சட்டசபை வளாகத்தில் நடந்தது. பி.ஆர்.டி.சி., இயக்குனர் சிவக்குமார், தனியார் பஸ் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பாகூர் வழியாக கரையாம்புத்துார் பகுதிக்கும், நெட்டப்பாக்கம் வழியாக கரையாம்புத்துார் பகுதிக்கும் பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்க நவடிக்கை எடுப்பதாக பி.ஆர்.டி.சி., இயக்குனர் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் உறுதியளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us