/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துணை சபாநாயகர் துவக்கி வைப்பு
/
ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துணை சபாநாயகர் துவக்கி வைப்பு
ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துணை சபாநாயகர் துவக்கி வைப்பு
ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துணை சபாநாயகர் துவக்கி வைப்பு
ADDED : ஆக 07, 2025 11:07 PM

நெட்டப்பாக்கம்:ஏரிப்பாக்கம் காலனியில் ஆழ்துளை கிணறும் அமைக்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
நெட்டப்பாக்கம் தொகுதி, ஏரிப்பாக்கம் காலனியில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறை போக்கும் வகையில், பொதுப்பணித்துறை சார்பில், 19.45 லட்சம் ரூபாயில், புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட உள்ளது. இப்பணியை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வாசு, கிராம குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் அய்யப்பன் உட்பட பலர் உடனிருந்தனர்.