ADDED : நவ 19, 2026 08:05 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி வங்கியாளர் கூட்டமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தில், அடல் ஓய்வூதிய திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
புதுச்சேரி தனியார் ஓட்டலில் இன்று (நவ.,19) நடந்த கூட்டத்தில், புதுச்சேரி வங்கியாளர் கூட்டமைப்பு சார்பில், பிரவேஷ்குமார், நிஷாந்த் ஆனந்த், மேலாளர் வெங்கட சுப்ரமணியன், ஒருங்கிணைப்பாளர் ரத்தினவேல், புதுச்சேரி கிராம வங்கி தலைவர் சதீஷ்குமார், திட்ட இயக்குனர் ஷீலா உட்பட பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகள், அமைப்பு சாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அடல் ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கங்கள், சிறப்பம்சங்கள், பங்களிப்புத் தொகை மற்றும் ஓய்வூதியப் பலன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
