தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்

ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்

ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்


ADDED : அக் 05, 2025 03:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2025 03:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், தேசிகர் உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம் கடந்த 2ம் தேதி துவங்கி வரும் 11ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, தினமும் காலை 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், மங்களாசாசனம் மற்றும் சேவை சாற்றும் முறை நிகழ்ச்சி நடக்கிறது. அதை தொடர்ந்து இரவில் பெருமாள் மற்றும் தேசிகர் புறப்பாடு நடந்து வருகிறது.

அதன்படி, நேற்று முன்தினம் காலை லட்சுமி ஹயக்ரீவர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் சேவை மற்றும் சாற்றுமுறை நிகழ்ச்சி நடந்தது. இதில், ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ராமபத்திரன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, வரும் 12ம் தேதி ஊஞ்சல் உற்சவமும், 13ம் தேதி பானக பூஜை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us