/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிக வருவாய் வந்தும் சுற்றுலாத்துறை அலட்சியம் நோணாங்குப்பம் குழாமில் படகுகள் பழுதால் அவதி படகு சவாரிக்கு தனியாரிடம் செல்லும் அவலம்

ADDED : ஆக 25, 2025 02:40 AM

அரியாங்குப்பம் : இரண்டு படகுகளின் மோட்டார் பழுதாகியதால் , வெகு நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வார விடுமுறையான சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அதிகளவில் நோணாங்குப்பம் படகு குழாமிற்கு குவிவது வழக்கம். வார விடுமுறையான இரு நாட்களில் ரூ.25 லட்சத்திற்கு மேல், சுற்றுலா பயணிகளிடமிருந்து வருவாய் வருகிறது.
இருந்தும் குழாமில் போதிய படகு வசதி இல்லாமலும், பாரடைஸ் பீச்சில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. படகு குழாமில், 12 படகுகள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 5 படகுகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. கூட்டம் அதிகமாக இருப்பதால், சுற்றுலா பயணிகள் தனியார் படகு குழாமை நோக்கி படையெடுத்து செல்கின்றனர். இதனால் சுற்றுலாத்துறைக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இங்கு இயங்கி வந்த 40 பேர் பயணிக்க கூடிய இரண்டு படகுகளின் மோட்டார் பழுதானதால் படகுகள் இயக்க முடியாமல் ஓரம் கட்டப்பட்டது. போதிய படகு இல்லாமல் நேற்று சுற்றுலா பயணிகள் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்தனர்.
இதனால் ஆத்திர மடைந்த சுற்றுலா பயணிகள், படகு குழாம் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். ஊழியர்கள் அவர் களை சமாதானப்படுத்தி, படகில் ஏற்றி விட்டனர். ஒவ்வொரு வாரமும் சுற்றுலா பயணிகள் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து வருவது தொடர் கதையாக இருக்கி றது. சுற்றுலாத்துறை கண்டு கொள்ளாமல் இருப்பதால், சுற்றுலா பயணிகள் கடும் அவதிப் பட்டு வருகின்றனர்.