ADDED : செப் 24, 2026 07:12 PM
புதுச்சேரி: காட்டேரிக்குப்பத்தில் பொது மக்களை அச்சுறுத்தி வந்த விஷ குளவி கூட்டை தீயணைப்பு துறையினர் தீ வைத்து அழித்தனர்.
காட்டேரிக்குப்பம் – கூனிமுடக்கு செல்லும் சாலை வழியாக தினமும் 100க்கும் மேற்பட்டோர் வாகனங்களில் சென்று வருகின்றனர். காட்டேரிக்குப்பம் சாராயக்கடை அருகே சாலையோரத்தில் உள்ள 2 பனை மரங்களில் விஷகுளவிகள் கூடு கட்டியிருந்தன. இதனால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
தகவலறிந்த திருக்கனுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு அப்பகுதிக்கு சென்று, பனைமரங்களில் இருந்த விஷ குளவிகள் கூட்டை தீ வைத்து அழித்தனர்.
மேலும், குளவிகள் மீண்டும் அதே இடத்தில் கூடு கட்டாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து குளவிகளை விரட்டினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
