விளையாட்டு திடலுக்கு ஏங்கும் நிர்ணயப்பட்டு இளைஞர்கள்
விளையாட்டு திடலுக்கு ஏங்கும் நிர்ணயப்பட்டு இளைஞர்கள்
ADDED : நவ 13, 2024 08:51 PM
பாகூர் ; நிர்ணயப்பட்டு கிராமத்தில், விளையாட்டு மைதானம் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட நிர்ணயப்பட்டு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள இளைஞர்கள் விளையாட மைதானம் எதுவும் இல்லை. இருப்பினும், அப்பகுதியில் உள்ள காலி மனைகள், குளக்கரை பகுதி, கோவில் வளாகத்தை விளையாட்டு திடலாக மாற்றி, கபடி, வாலிபால், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.
விளையாட்டின் போது, மனைப்பிரிவுகளில் உள்ள எல்லை கற்கள் மீது மோதி தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும், இளைஞர்கள் பயிற்சி மேற்கொண்டு வரும் இந்த மனைப் பிரிவை, பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே, நிர்ணயப்பட்டு கிராமத்தில், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு திடல் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
