/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமராஜர் நகர் தொகுதியில் தேவதாஸ் போட்டியிட விருப்ப மனு
/
காமராஜர் நகர் தொகுதியில் தேவதாஸ் போட்டியிட விருப்ப மனு
காமராஜர் நகர் தொகுதியில் தேவதாஸ் போட்டியிட விருப்ப மனு
காமராஜர் நகர் தொகுதியில் தேவதாஸ் போட்டியிட விருப்ப மனு
ADDED : ஜன 05, 2026 04:32 AM

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதியில் காங்., சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ் போட்டியிட சீட் தர வேண்டும் என அந்த தொகுதியை சேர்ந்த காங்., நிர்வாகிகள், கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தனர்.
நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், காமராஜர் நகர் தொகுதியில் காங்., தலைவர் வைத்திலிங்கத்தின் ஆதரவாளரான சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ் வேட்பாளராக களமிறங்க திட்டமிட்டு உள்ளார். இதற்காக, தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, பொது பிரச்னைகளை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண்பது என தேவதாஸ் தீவிரமாக உள்ளார்.
இந்நிலையில், காமராஜர் நகர் தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட அவருக்கு சீட் வழங்க வேண்டும் என, தொகுதியை சேர்ந்த காங்., பிரமுகர்கள், கட்சி வடக்கு மற்றும் தெற்கு வட்டார நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து விருப்ப மனுவை காங்., தலைமை அலுவலகத்தில் அளித்தனர்.
தொகுதியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் தேவதாஸ் சேவைகளை கருத்தில் கொண்டு விருப்ப மனு தாக்கல் செய்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

