/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருநள்ளாறில் சனி பகவானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்
/
திருநள்ளாறில் சனி பகவானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்
திருநள்ளாறில் சனி பகவானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்
திருநள்ளாறில் சனி பகவானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்
ADDED : மார் 30, 2025 03:20 AM
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனி பகவானை, சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
காரைக்கால், திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனி பகவான் அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று (29ம் தேதி) சனிப் பெயர்ச்சி நடைபெறுவதாக தகவல்கள் பரவியது. இதுக்குறித்து கோவில் நிர்வாகம் பாரம்பரிய கணிப்பு முறையின் படி, 2026ம் ஆண்டிலேயே சனிப்பெயர்ச்சி நடைபெறும் என தெரிவித்தது.
இருப்பினும், நேற்று சனிக்கிழமையை முன்னிட்டு திருநள்ளாறு கோவிலுக்கு சென்னை, சேலம், திருச்சி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகைப் புரிந்தனர். அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கூட்டம் அதிகரித்து காணப்பட்டால், பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சனிபகவானை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, பக்தர்களுக்கு கேர்வில் நிர்வாகம் சார்பில், பிஸ்கட், தண்ணீர், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், சுமார் 1 லட்சம் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து குறிப்பிடத்தக்கது.
சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா தலைமையில் எஸ்.பி., சுப்ரமணியன், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.