ADDED : நவ 16, 2024 02:06 AM

புதுச்சேரி: சட்டம் ஒழுங்கு மற்றும் போலீசார் இடமாற்றல் தொடர்பாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்துடன், டி.ஜி.பி., ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை, போலீஸ் டி.ஜி.பி., ஷாலினிசிங், ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, செயலர் கேசவன், சீனியர் எஸ்.பி., அனிதாராய் சட்டசபையில் சந்தித்து பேசினர். அப்போது, புதுச்சேரியின் சட்டம் ஒழுங்கு பிரச்னை, எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது, புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றங்கள், சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து, ஓரிரு நாட்களில் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றல் உத்தரவு வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில், உள்துறை அமைச்சரை சந்திப்பதற்காக அவரது அலுவலகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள் ஏராளமானோர் சந்திக்க காத்திருந்தனர்.
