பாகூர் பகுதியில் உள்ள பதற்றமான ஓட்டுச் சாவடிகளில் டி.ஜி.பி., ஆய்வு
பாகூர் பகுதியில் உள்ள பதற்றமான ஓட்டுச் சாவடிகளில் டி.ஜி.பி., ஆய்வு
ADDED : ஏப் 09, 2026 10:43 PM

அ நிறம் | அளவு
பாகூர்: பாகூர் பகுதியில், பதற்றமான ஓட்டுச் சாவடிகளை, புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி., ஷாலினிசிங் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கியது. பதற்றமான ஓட்டுச் சாவடிகளில், போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனிடையே, புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி., ஷாலினி சிங், டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம், சீனியர் எஸ்.பி., கலைவாணன் ஆகியோர் பாகூர் பகுதியில் உள்ள பதற்றமான ஓட்டு சாவடிகளை ஆய்வு செய்தனர்.
அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் வாக்காளர்களுக்கு எவ்வித தொந்தரவும் இல்லாத வகையில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்து ஆலோசனை கூறினர். ஆய்வின்போது பாகூர் சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
