தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முதல்வர் ரங்கசாமியுடன் டி.ஜி.பி., சந்திப்பு

முதல்வர் ரங்கசாமியுடன் டி.ஜி.பி., சந்திப்பு

முதல்வர் ரங்கசாமியுடன் டி.ஜி.பி., சந்திப்பு


ADDED : மார் 02, 2024 10:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2024 10:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் சட்டசபையில் சந்தித்து பேசினார்.

புதுச்சேரியில் பட்டி தொட்டி எல்லாம் கஞ்சா விற்பனை நடக்கிறது. ஆங்காங்கே கஞ்சா விற்பவர்களை பிடித்தாலும், முழுதுமாக போலீசாரால் தடுக்க முடியவில்லை. பஸ், ரயில்கள் என பல வழியில் கடத்தி வரப்படும் கஞ்சா, பள்ளி கல்லுாரி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி வருகிறது.

இந்நிலையில், புதுவகை போதை பொருட்கள் வருகையும் அதிகரித்துள்ளது. ரெஸ்டோ பார்களில் எல்.எஸ்.டி., என்கிற போதை ஸ்டாம்ப், சரஸ், கிரிஸ்டல் மெத்தாபெட்டமைன் உள்ளிட்டவையும் தற்போது புழக்கத்திற்கு வந்துவிட்டது.

இது தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், போலீஸ் டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் நேற்று காலை 11:30 மணிக்கு சட்டசபை வந்தார். அங்கு முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்.

அப்போது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் குறித்தும், போலீசாருக்கு வழங்கப்பட்ட புதிய பதவி உயர்வுக்கான அரசாணை வெளியிடுதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us