ADDED : ஏப் 27, 2025 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் மூலநாதர் கோவிலில், புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி., ஷாலினி சிங் சாமி தரிசனம் செய்தார்.
பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு, புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி., ஷாலினி சிங் நேற்று சாமி தரிசனம் செய்தார். மூலநாதர், வேதாம்பிகையம்மன் மற்றும் மூலநாதரை வழிபட்டார். அவருக்கு, கோவில் தல வரலாறு, சிறப்புகள் குறித்து அர்ச்சகர்கள் சங்கர், பாபு ஆகியோர் விளக்கினர். கோவில் வளாகத்தை சுற்றி வந்த அவர் கொடி மரம் எதிரே விழுந்து வணங்கி புறப்பட்டார். கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.