/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூரில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்
/
பாகூரில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்
ADDED : செப் 24, 2024 06:30 AM

பாகூர்: பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில், ஓய்வூதியதாரர்கள் கோரிக்கைகளை வலியுருத்தி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், அவர்களுக்கு பின்னர் அவர்களின் வாரசுதாரர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஓய்வூதியம் கடந்த சில மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது. நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை உடனே வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை ஓய்வூதியதாரர்கள் 30க்கும் மேற்பட்டோர், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரை நேரில் சந்தித்து பேச வந்துள்ளனர்.
அவர் அங்கு இல்லாததால், அலுவலகத்தின் உள்ள அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி ஓய்வூதியதாரர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

