தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ துாய்மை திருவிழா கோலாப்போட்டி

துாய்மை திருவிழா கோலாப்போட்டி

துாய்மை திருவிழா கோலாப்போட்டி


ADDED : செப் 26, 2026 07:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 07:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: துாய்மை திருவிழாவையொட்டி, நகராட்சி ஊழியர்கள் மற்றும் கல்லுாரி மாணவிகள் கோலப்போட்டியில் பங்கேற்றனர்.

மத்திய அரசின் ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் ஒர் அங்கமான துாய்மை திருவிழாவை முன்னிட்டு, ஒரு மாத துாய்மை பணி நிகழ்ச்சி அடுத்த மாதம் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், ஒன்பதாம் நாள் நிகழ்ச்சி புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், துாய்மையான புதுச்சேரி என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி, நகராட்சி ஊழியர்கள், பாரதிதாசன் கலைக் கல்லுாரி மாணவிகள் கோலப்போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியை, உள்ளாட்சித்துறை இயக்குனர் ஆதர்ஷ் துவக்கி வைத்தார்.

நகராட்சி ஆணையர் ஸ்ரீஜித், சுகாதார அதிகாரி ஆர்த்தி, உதவி திட்ட அதிகாரி வெங்கடாசலபதி, உதவிப்பொறியாளர் யுவராஜ், இளநிலைப்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட நகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.

இப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு வரும் 2ம் தேதி காந்திஜெயந்தி அன்று கம்பன் கலையரங்கில் நடைபெறும் விழாவில் பரிசு வழங்கப்பட உள்ளதாக, நகராட்சி ஆணையர் தெரிவித்தார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us