/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வயிற்றுபோக்கு தடுப்பு விழிப்புணர்வு நாடகம்
/
வயிற்றுபோக்கு தடுப்பு விழிப்புணர்வு நாடகம்
ADDED : ஜூலை 25, 2025 02:34 AM

புதுச்சேரி: புதுச்சேரி, ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், குழந்தைகள் மருத்துவத்துறை மூலம் வயிற்று போக்கு தடுப்பு பிரசார விழிப் புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குழந்தைகள் வெளிப்புற சிகிச்சை பிரிவில் நடந்த நிகழ்ச்சியில், மக்கள் தொடர்பு அதிகாரி குருபிரசாத், குழந்தைகள் மருத்தவத் தலைவர் அனுராதா, குழந்தை நல மூத்த அதிகாரிகள் முகுந்தன், பிரபாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், சபரி செவிலியர் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்று, வயிற்று போக்கு தடுப்பு பிரசார விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.
அதில், வயிற்று போக்கினால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அதை தவிர்க்கும் வழிமுறைகள், உப்பு நீர் கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகளின் முக்கியத்துவம் குறித்தும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுவது குறித்தும் மக்களுக்கு விளக்கம் அளித்தனர்.