/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இலவச அரிசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததா? அ.தி.மு.க., அன்பழகன் கேள்வி
/
இலவச அரிசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததா? அ.தி.மு.க., அன்பழகன் கேள்வி
இலவச அரிசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததா? அ.தி.மு.க., அன்பழகன் கேள்வி
இலவச அரிசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததா? அ.தி.மு.க., அன்பழகன் கேள்வி
ADDED : அக் 16, 2024 04:23 AM
புதுச்சேரி : ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதா என்பதை கவர்னர் தெளிவுப்படுத்த வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் கூறியதாவது:
புதுச்சேரியில் இலவச அரிசி உள்ளிட்ட பண்டிகை கால பொருட்களுக்கு வழங்கப்பட்டு வரும் பணத்திற்கு பதிலாக பொருளாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தீபாவளி பண்டிகைக்கு, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை கான்பெக்ட் மூலம் வழங்கப்படும் என, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், பொதுமக்கள் இலவச அரிசிக்கு பதில் தரமான அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுவரை இலவச அரிசி வழங்கப்படவில்லை. இனியும், மக்களை ஏமாற்றும் வகையில் அறிக்கை வெளியிடுவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இலவச அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதா? ஆம் எனில், எந்த மாதத்தில் இருந்து இலவச அரிசி வழங்கப்படும் என்பதை கவர்னர் தெளிவுப்படுத்த வேண்டும்.
கடந்த வாரம் ஒரு மணி நேரம் பெய்த மழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையே அரசு படிப்பினையாக எடுத்துக் கொண்டு, நகரின் மழைக்கால வடிகால்களை மேம்படுத்தி இருக்க வேண்டும். அதனை செய்யாமல், முதல்வரும், கலெக்டரும் தனித்தனியாக கூட்டம் நடத்தி 'போட்டோ சூட்' நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 மாதமாக கொசு உற்பத்தி காரணமாக டெங்கு உள்ளிட்ட பருவகால தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. அரசு பொது மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லை. கவர்னர் முன்னறிவிப்பின்றி மருத்துவமனையை ஆய்வு செய்தால், மக்கள் படும் வேதனை தெரிய வரும்' என்றார்.