/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கட்டுமரத்திற்கு டீசல் மானியம் : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
/
கட்டுமரத்திற்கு டீசல் மானியம் : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
கட்டுமரத்திற்கு டீசல் மானியம் : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
கட்டுமரத்திற்கு டீசல் மானியம் : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ADDED : செப் 19, 2025 03:13 AM
புதுச்சேரி: 'எப்.ஆர்.பி., கட்டுமரத்திற்கு, டீசல் மானியம் வழங்கப்படும்' என, சட்டசபையில், முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட 400 விசைப்படகு உரிமையாளர்களுக்கு டீசல் மானியம், 12 ரூபாய் வழங்கப்படுகிறது. அதையடுத்து, மீன் வளத்துறையில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட எப்.ஆர்.பி., கட்டுமர உரிமையாளர்களுக்கு, அரசு அங்கீகரிக்கப்பட்ட டீசல் பங்க்கில், டீசல் கொள்முதல் செய்யும் உரிமையாளர்களுக்கு, வாட் வரி விலக்கு அளிக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், கூடுதலாக, 3,208 உரிமையாளர்களுக்கு, டீசல் மானியமாக லிட்டருக்கு 12 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இத்தகவலை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.