/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண டி.ஐ.ஜி., தலைமையில் ஆய்வு
/
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண டி.ஐ.ஜி., தலைமையில் ஆய்வு
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண டி.ஐ.ஜி., தலைமையில் ஆய்வு
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண டி.ஐ.ஜி., தலைமையில் ஆய்வு
ADDED : பிப் 11, 2025 05:51 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, டிராபிக் சிக்னல்களில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில், டிராபிக் பிரச்னை உச்ச கட்டத்தில் உள்ளது. புதுச்சேரி முழுதும் சென்டர் மீடியன்களில் திறக்கப்பட்டுள்ள 150 இடைவெளிகள், தாறுமாறான பார்க்கிங், சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை, முகூர்த்த நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் குவியும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
போதிய போக்குவரத்து மேலாண்மை இல்லாததால் ராஜிவ், இந்திரா மற்றும் கொக்குபார்க் சிக்னல்களில் கடும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. இது குறித்து தினமலர் நாளிதழில் கடந்த வாரம் செய்தி வெளியிடப்பட்டு, பொதுமக்கள் பாதிப்பு குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.
அதையடுத்து, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி, எஸ்.பி., செல்வம் ஆகியோர் நேற்று இரவு புதுச்சேரி பகுதி சிக்னல் பகுதிகளில் ஆய்வு செய்தனர். டிராபிக் ஜாம் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.