/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., மக்களிடம் குறைகேட்பு
/
மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., மக்களிடம் குறைகேட்பு
மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., மக்களிடம் குறைகேட்பு
மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., மக்களிடம் குறைகேட்பு
ADDED : நவ 17, 2025 02:47 AM

பாகூர்: கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்ற நிகழ்வில், டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் பங்கேற்று, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். சில புகார்களுக்கு நீதி மன்றத்தை அனுகிட பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில், பொது மக்கள் தரப்பில் 'பாகூரில் நகர பகுதியில் போக்குவரத்தை முறைப்படுத்திட வேண்டும்.
சாலைகளில் பாதுகாப்பு எச்சரிக்கை பலகை மற்றும் குறியீடுகள் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுப்பதாக, டி.ஐ.ஜி., சத் திய சுந்தரம் உறுதியளித்தார்.
இன்ஸ்பெக்டர்கள் சஜித், கணணன், ஆறுமுகம், தன்வந்திரி, சப் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், நந்தக்குமார், சந்திரசேகர், முருகானந்தம், ஜெயகுருநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

