/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெரியகடை போலீசில் டி.ஐ.ஜி., நேற்று ஆய்வு
/
பெரியகடை போலீசில் டி.ஐ.ஜி., நேற்று ஆய்வு
ADDED : நவ 11, 2024 07:25 AM
புதுச்சேரி : பெரியக்கடை போலீஸ் ஸ்டேஷனில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி சட்டம்-ஒழுங்கு டி.ஐ.ஜி.,யாக சத்தியசுந்தரம் பதவியேற்றது முதல் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, பெரியக்கடை போலீஸ் ஸ்டேஷனில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் நேற்று காலை திடீரென வருகைபுரிந்து ஆய்வு செய்தனர்.அப்போது, போலீஸ் ஸ்டேஷனில் உள்ள முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ததுடன், குற்றப்பின்னணியில் உள்ள ரவுடிகளில் தற்போதிய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை குறித்து போலீசாரிடம் ஆலோசனை நடத்தினர். இதில், இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.