தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை டி.ஐ.ஜி., சத்ய சுந்தரம் எச்சரிக்கை

 போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை டி.ஐ.ஜி., சத்ய சுந்தரம் எச்சரிக்கை

 போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை டி.ஐ.ஜி., சத்ய சுந்தரம் எச்சரிக்கை


ADDED : ஜூலை 03, 2026 03:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 03:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இ.சி.ஆரில் நவீன மீன் அங்காடி சிக்னலை டி.ஐ.ஜி., சத்ய சுந்தரம், போக்குவரத்து சீனியர் எஸ்.பி., திவ்யா ஆகியோர் நேற்றிரவு ஆய்வு செய்தனர்.

இ.சி.ஆரில் கொக்கு பார்க் சந்திப்பில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தற்காலி கமாக பேரி கார்டு கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கொக்கு பார்க் சிக்னல், இ.சி.ஆர்., உழவர்கரை நான்கு முனை சந்திப்பு ஆகிய சிக்னல்களை டி.ஐ.ஜி., சத்யசுந்தரம், போக்குவரத்து சீனியர் எஸ்.பி., திவ்யா, இன்ஸ்பெக்டர் வேலய்யன் ஆகியோர் நேற்றி ரவு ஆய்வு செய்தனர்.

அப்போது சிக்னல் கருவிகள் எதுவும் வேலை செய்யாமல் வடக்கு போக்குவரத்து போலீசாரே போக்குவரத்தை சரி செய்து வந்தனர். உடனே சிக்னல் கருவிகள் அனைத்தும் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என, டி.ஐ.ஜி., சிக்னல்களை பராமரிக்கும் தனியார் நிறுவன ஊழியரிடம் அறிவுறுத்தினார்.

அவர் கூறுகையில், 'கொக்கு பார்க் சந்திப்பு மற்றும் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் இருந்து ஏராளமான வாகன ஓட்டிகள், ராஜிவ் சிக்னலை நோக்கி செல்லாமல், போக்குவரத்து விதிமுறைகளை மீறி உழவர் கரை தாசில்தார் அலுவலக சந்திப்பு சிக்னலுக்கு எதிர் திசையில் வருகின்றனர்.

இதனால் இந்த சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகள் இதனை தவிர்க்க, உட்புற சாலை வழியாக லட்சுமி நகர் வந்து லாஸ்பேட்டை செல்லும் சாலைக்கு செல்லலாம். போக்குவரத்து விதிகளை மீறி வரும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இ.சி.ஆரில் இருந்து லாஸ்பேட்டை செல்லும் சாலையை விரிவு படுத்துவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து வருகிறோம்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us