sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முருங்கப்பாக்கத்தில் வரும் 23ம் தேதி டிஜிட்டல் வரைபட கலந்தாய்வு கூட்டம்

/

முருங்கப்பாக்கத்தில் வரும் 23ம் தேதி டிஜிட்டல் வரைபட கலந்தாய்வு கூட்டம்

முருங்கப்பாக்கத்தில் வரும் 23ம் தேதி டிஜிட்டல் வரைபட கலந்தாய்வு கூட்டம்

முருங்கப்பாக்கத்தில் வரும் 23ம் தேதி டிஜிட்டல் வரைபட கலந்தாய்வு கூட்டம்


ADDED : ஆக 20, 2025 11:44 PM

Google News

ADDED : ஆக 20, 2025 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : முருங்கப்பாக்கத்தில் வரும் 23ம் தேதி டிஜிட்டல் வரைபடம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது.

நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பு:

புதுச்சேரி நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் தற்போது நடைமுறையில் உள்ள கடந்த 1970ல் தயாரிக்கப்பட்ட வரைபடம் உள்ளிட்ட நிலவரித் திட்ட ஆவணங்களை மேம்படுத்தப்பட உள்ளது.

இதற்காக, புதுச்சேரியில் டிஜிட்டல் நில அளவை செய்து அதற்கேற்ப, நிலவரித் திட்ட ஆவணங்கள் மற்றும் புலப்படங்களை தயாரிக்க, மத்திய அரசின் நிலவனங்கள் துறை பங்களிப்புடன் புதுச்சேரியில் மறு நில அளவை செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட எண் -44, முருங்கப்பாக்கம் வருவாய் கிராமம் தேர்வு செய்து, கடந்த மார்ச் மாதம் இந்திய சர்வே துறை மூலம் புதிய நில அளவை செய்வதற்காக ட்ரோன் சர்வே செய்யப்பட்டது. அந்த வரைபடங்கள் தற்போதுள்ள புலப்படங்களுடன் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலவரித்திட்ட ஆவணங்களில் கண்டறியப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து நில உரிமையாளர் பற்றிய விவரங்கள் சேகரித்து, உரிய ஆவணங்களின் அடிப்படையில் புதிய உட்பிரிவுகள் செய்து, பட்டா மாற்றி அதற்குரிய ஆவணங்கள் உடனுக்குடன் உரியவர்களுக்கு வழங்கப்படும்.

முருங்கப்பாக்கம் வருவாய் கிராமத்தில் நிலம், வீடுகள், கட்டடங்கள் வைத்திருப்போர், இத்துறையால் குறிப்பிடப்படும் நாட்களில் அவரவர் இடத்தில் நேரில் ஆஜராகி தங்கள் நிலங்கள், இடங்கள், வீடுகள், கட்டடங்கள் தொடர்பான ஆவணங்களையும் தங்கள் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை ஆய்வுக்கு வரும் இத்துறை அதிகாரிகளிடம் தந்து, நில அளவைப் பணிகள் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பை தரவேண்டும்.

இது தொடர்பாக நாளை மறுநாள் 23ம் தேதி காலை 10.30 மணிக்கு முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெறும் கலந்தாய்வு விளக்க கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us