/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'தினமலர்- - பட்டம்' இதழ் ' அறிவு பெட்டகம்'
/
'தினமலர்- - பட்டம்' இதழ் ' அறிவு பெட்டகம்'
ADDED : அக் 10, 2025 03:55 AM

முதலிடம் பிடிப்பேன் 'தினமலர் - பட்டம்' இதழ் வாங்கிப் படித்தேன். அதில், பொதுஅறிவு உட்பட பல்வேறு அரிய தகவல்கள் உள்ளன. பட்டம் இதழை படித்ததால் தான் பள்ளி அளவிலான வினாடி - வினா போட்டியில் ஒரு அணியாக இணைந்து முதலிடம் பிடிக்க முடிந்தது. தொடர்ந்து பட்டம் இதழ் படித்து, மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் முதலிடம் பிடிப்பேன்.
லோகிதா, 8ம் வகுப்பு
தகவல் களஞ்சியம் 'தினமலர்- பட்டம்' இதழ் வினாடி வினா போட்டியில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டி சுற்றுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தாலும், பட்டம் இதழை தொடர்ந்து படித்து வந்ததால், இன்றைய போட்டியில் முதலிடம் பிடிக்க முடிந்தது. வினாடி வினா போட்டிக்காக மட்டும் அல்ல; அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் 'தினமலர்-பட்டம்' இதழை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். அந்த அளவிற்கு அரிய தகவல்கள் கொட்டி கிடக்கிறது.
ஹரிஸ், 7 ம் வகுப்பு
பொக்கிஷ தகவல்கள் 'தினமலர்- பட்டம்' இதழ் பாட புத்தங்களைத் தாண்டி, பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான அனைத்து முக்கிய தகவல்களும் அடங்கியுள்ளன. சில தகவல்களை படிக்க பிரமிப்பாக உள்ளது. அறிவியல், வரலாற்று தகவல்கள் அனைத்துமே பொக்கிஷம். தினமலர் - பட்டம் இதழ் அறிவு பெட்டகமாக உள்ளதால் மாணவர்கள் விரும்பி படிக்க வேண்டும்.
தக் ஷன், 9ம் வகுப்பு
கட்டாயம் படிங்க வினாடி வினா போட்டியில் கேள்விகள் கேட்கும்போது மனது 'திக் திக்' என்றிருந்தது. நுாலிழையில் தான் அதுவும் டை பிரேக்கரில் தான் ஒரே ஒரு கேள்வியில் முதலிடம் பெறும் வாய்ப்பை தவற விட்டோம். இருப்பினும் இரண்டாம் இடம் பிடித்து மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
'தினமலர் - பட்டம்' இதழை தினசரி படித்து வருகிறேன். இதில், பொதுஅறிவு, போட்டித் தேர்வுகளுக்கான தகவல்கள் அனைத்துமே சூப்பர். எளிய தமிழில் புரியும் விதத்தில் தருகின்றனர். மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய இதழ்.
பிரசாந்த், 9ம் வகுப்பு.