/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'தினமலர்- -- பட்டம் ' இதழ் வினாடி வினா போட்டி
/
'தினமலர்- -- பட்டம் ' இதழ் வினாடி வினா போட்டி
ADDED : ஜன 23, 2025 05:15 AM

புதுச்சேரி: முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில், தினமலர் பட்டம் இதழ் சார்பில் வினாடி வினா போட்டி நடந்தது.
புதுச்சேரி 'தினமலர் பட்டம்' இதழ் மற்றும் ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் பரிசு வெல்' என்ற மெகா வினாடி வினா போட்டி நடக்க உள்ளது.
இப்போட்டியில் பங்கேற்க, பள்ளி அளவிலான அணிகள் தேர்வு செய்யும் போட்டி, கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
பள்ளி தாளாளர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். வினாடி வினா போட்டியில், 6ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் 200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
முதல் நிலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 16 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தேர்வாகினர்.
தலா 2 பேர் கொண்ட 8 அணிகள் இறுதி சுற்றில் பங்கேற்றது. இதில், 9 ம் வகுப்பு மாணவர் தமிழ் இனியன், 8ம் வகுப்பு மாணவர் தமனேஷ் முதலிடம் பிடித்தனர். 8ம் வகுப்பு மாணவர்கள் ஹரி கிருஷ்ணன், ஆதில் அலி ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றஅணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி அளவில் தேர்வான இரு அணிகளும், மெகா வினாடி வினா போட்டியில் பங்கேற்க தேர்வாகினர். இறுதி சுற்று போட்டியில் பங்கேற்ற மற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

