தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'தினமலர்' - 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு முன்பதிவு இன்று துவக்கம்

'தினமலர்' - 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு முன்பதிவு இன்று துவக்கம்

'தினமலர்' - 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு முன்பதிவு இன்று துவக்கம்


ADDED : ஏப் 14, 2025 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2025 04:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: 'தினமலர்' நாளிதழ் நடத்தும் 'நீட்' மாதிரி தேர்விற்கு முன் பதிவு இன்று துவங்குகிறது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு, வரும் மே மாதம் 4ம் தேதி நாடு முழுதும் நடக்கிறது. 23 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுத உள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் 'நீட்' நுழைவு தேர் விற்கு விண்ணப்பித் துள்ள மாணவர்களின் டாக்டர் கனவினை நிறைவேற்றிட 'தினமலர்' நாளிதழ், ஸ்பெக்ட்ரா நிறுவனத்துடன் இணைந்து, 'நீட்' மாதிரி தேர்வினை வரும் 20ம் தேதி நடத்த உள்ளது.

மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு குறித்த அச்சத்தை போக்க இந்த மாதிரி தேர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வு உண்மையான 'நீட்' தேர்வு போன்றே நடத்தப்பட உள்ளது. இத்தேர்வில் பங்கேற் பதன் மூலம் தன்னம்பிக்கை பெற்று, 'நீட்' தேர்வை தயக்கமின்றி எழுதலாம்.

இத்தேர்விற்கு, முன்பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதற்கான முன்பதிவு இன்று 14ம் தேதி துவங்குகிறது. கியூ.ஆர்.கோடினை ஸ்கேன் செய்து முன் பதிவு செய்யலாம்.

'தினமலர்' நாளிதழின் இந்த அரிய வாய்ப்பை 'மிஸ்' பண்ணாதீங்க...

எப்படி பதிவு செய்வது


கியூ.ஆர் கோடினை ஸ்கேன் செய்து உள்ளே சென்றதும், 'தினமலர்' நாளிதழ், ஸ்பெக்ட்ரா நிறுவனத்தின் லிங்க் தோன்றும். அதனை கிளிக் செய்து, முகப்பு பகுதிக்கு உள்ளே சென்றதும், உங்களுடைய பெயர், இ-மெயில் முகவரி, மொபைல் எண், பள்ளி பெயர், இருப்பிடம், பாலினம் குறித்த கேள்விகள் பளீச்சிடும்.

அதனை கவனமாக பூர்த்தி செய்த பிறகு, நான் ரோபோர்ட் இல்லை என, கிளிக் செய்தால் போதும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us