தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'தினமலர் லட்சிய ஆசிரியர் விருது' வழங்கும் விழா

'தினமலர் லட்சிய ஆசிரியர் விருது' வழங்கும் விழா

'தினமலர் லட்சிய ஆசிரியர் விருது' வழங்கும் விழா


ADDED : நவ 26, 2024 07:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2024 07:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி; தினமலர் லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழா, புதுச்சேரியில் இன்று நடக்கிறது.

சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நல்லாசிரியர் விருது வழங்குவது போல், ஒவ்வொரு ஆண்டும் 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'லட்சிய ஆசிரியர்' விருது வழங்கப்பட்டு வருகிறது. வரப்பெறும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில், தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, லட்சிய ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது.

இந்தாண்டிற்கான புதுச்சேரி தினமலர் நாளிதழின் லட்சிய ஆசிரியர் விருதிற்கு, கடந்த ஆக., 5ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விழுப்புரம், கடலுார், புதுச்சேரி என பல்வேறு மாவட்ட பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தன.

இதனை நடுவர் குழு கவனமுடன் பரிசீலித்து, மெச்சத்தக்க வகையில் பணியாற்றிய ஆசிரியர்களை தினமலர் லட்சிய ஆசிரியர் விருதிற்கு தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கான விருது வழங்கும் விழா, புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள ஓட்டல் ஜெயராமில் இன்று (26ம் தேதி) காலை 10:00 மணிக்கு நடக்கிறது.

விழாவில், புதுச்சேரி 'தினமலர்' வெளியீட்டாளர் மற்றும் பதிப்பாசிரியர் கே.வெங்கட்ராமன், சேலம் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் டீன் செந்தில்குமார், கல்வியாளர் புகழேந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

மாணவ சமுதாயத்திற்காக தன்னை சுடர் விளக்காக அர்ப்பணித்து, ஒளி வீசிக்கொண்டு இருக்கும் ஆசிரியர்களுக்கு, விழாவில், லட்சிய ஆசிரியர் விருது வழங்கி மகுடம் சூட்டப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us