sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இன்ஜினியரிங் கனவினை நனவாக்கும் தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி

இன்ஜினியரிங் கனவினை நனவாக்கும் தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி

இன்ஜினியரிங் கனவினை நனவாக்கும் தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி


ADDED : ஜூன் 14, 2026 09:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 09:38 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இன்ஜினியரிங் கனவினை நனவாக்கும் தினமலர் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி கடலுார் - விழுப்புரத்தில் இன்று 14ம் தேதி கோலாகலமாக நடக்கிறது

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி, உயர்கல்வியை நோக்கி மாணவர்கள் அடி எடுத்து வைக்கும் மிக முக்கியமான காலகட்டம் இது. குறிப்பாக, தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறைகள் விரைவில் தொடங்கவுள்ளன.

இன்ஜினியரிங் படிப்பில் நுாற்றுக்கணக்கான கல்லுாரிகளும், எக்கச்சக்கமான புதிய தொழில்நுட்பப் பாடப்பிரிவுகளும் கொட்டிக்கிடக்கும் இந்தச் சூழலில், எந்தப் படிப்பை தேர்ந்தெடுத்தால் நல்ல எதிர்காலம் இருக்கும். எந்தக் கல்லுாரி நம்முடைய திறமைக்குத் தீனி போடும் என்ற குழப்பமும் பதற்றமும் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் இயல்பாகவே எழுந்துள்ளது.

மாணவர்களின் இந்தக் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவர்களின் எதிர்கால கனவுக்கு சரியான பாதையைக் காட்ட, தினமலர் நாளிதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து டி.என்.இ.ஏ., இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி-2026 என்ற பிரம்மாண்ட ஆலோசனை கருத்தரங்கை தமிழகம் முழுதும் நடத்தி வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, இன்று 14ம் தேதி கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இந்த வழிகாட்டு முகாம் நடைபெற உள்ளது. கடலுார் டவுன் ஹாலில் காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும், விழுப்புரம் புது பஸ்டாண்ட் அருகில் உள்ள ஸ்ரீபாலாஜி மகாலில் மாலை 3 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் நடக்கிறது.

இதில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் புருேஷாத்தமன், கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்க உள்ளனர்.

கவுன்சிலிங்கில் மிக முக்கியமான கட்டம். நமக்கு விருப்பமான கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளின் பட்டியலை முன்னுரிமை அடிப்படையில் வரிசைப்படுத்துவதாகும். சிறிய தவறு நடந்தாலும் தகுதியான கல்லுாரி கைநழுவிப் போய்விடும்.

இதனைப் பிழையின்றி செய்வது எப்படி என்பதை நிபுணர்கள் நேரடியாக விளக்குவர். பொறியியல் சேர்க்கை நடைமுறைகளில் ஆண்டுதோறும் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் நிர்வாக மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.

இந்த ஆண்டு அமலுக்கு வந்துள்ள புதிய விதிமுறைகள் என்ன, புரொவிஷனல் அலாட்மென்ட் பெறும் வரை கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் எவை என்பது குறித்தும் விளக்கப்பட உள்ளது.

கட்-ஆப் மதிப்பெண்ணுக்கும், மாநிலத் தரவரிசைக்கும் எந்தெந்தக் கல்லுாரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதைப் புரிந்துகொண்டு, எதார்த்தமான முறையில் கல்லுாரிகளைத் தேர்வு செய்ய கல்வியாளர்கள் வழிகாட்ட உள்ளனர். செயற்கை நுண்ணறிவு , டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி போன்ற நவீனப் படிப்புகளின் எதிர்காலம் என்ன. அதே நேரத்தில், என்றும் மங்காத வேலைவாய்ப்புகளை கொண்ட மெக்கானிக்கல், சிவில், இ.இ.இ., இ.சி.இ., போன்ற கோர் படிப்புகளுக்கு தற்போதைய உலகளாவிய சந்தையில் உள்ள டிமாண்ட் என்ன என்பது குறித்தும் எடுத்துரைக்க உள்ளனர்.

பொறியியல் துறையில் சிறந்த எதிர்காலத்தை தேட கனவுகளுடன் இருக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீங்க... முன் பதிவு செய்துவிட்டு காலையில சீக்கிரமா வந்துடுங்க...

இலவச முன்பதிவிற்கு: தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம்.

இதில் பங்கேற்க கியூ.ஆர்.கோடு ஸ்கேன்செய்து அல்லது 9566777833 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் RGN என்று டைப் செய்து பதிவுசெய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us