sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதிய தொழிற்கொள்கை: பா.ஜ., சாமிநாதன் கோரிக்கை

/

புதிய தொழிற்கொள்கை: பா.ஜ., சாமிநாதன் கோரிக்கை

புதிய தொழிற்கொள்கை: பா.ஜ., சாமிநாதன் கோரிக்கை

புதிய தொழிற்கொள்கை: பா.ஜ., சாமிநாதன் கோரிக்கை


ADDED : ஆக 22, 2011 01:03 AM

Google News

ADDED : ஆக 22, 2011 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதிய தொழிற்கொள்கையை அரசு அமல்படுத்த வேண்டும் என பா.ஜ., மாநில செயலாளர் சாமிநாதன் கோரிக்கை விடுத்துள் ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளில் 40 ஆயிரம் சிறு தொழிற்சாலைகளை மூடி விட்டதால் லட்கணக் கானோர் வேலை இழந்தனர். தட்டாஞ்சாவடி, மேட் டுப்பாளையம், சேதராப்பட்டு, காட்டுக்குப்பம் உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் இயங்கி வந்த தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டன. திருபுவனை எலக்ட்ரானிக் பார்க் செயல் இழந்து காணப்படுகிறது. தொழிற்சாலைகளால் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். இங்கு படித்த இளைஞர் கள் பிற மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்ல வேண்டிய சூழல் உள் ளது. தொழில் வளர்ச்சி நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சிறு தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்ட மானியம் தற்போது வழங்கப்படவில்லை. தொழிற்சாலைகள் மீண்டும் அதிகரிக்க, சிறு தொழிற்சாலைகளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும். பட்ஜெட்டில் தொழில் துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். புதிய தொழிற்கொள்கையை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us