/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.டி.டி.சி., கேட்டரிங் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
பி.டி.டி.சி., கேட்டரிங் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 24, 2011 12:05 AM
புதுச்சேரி : பி.டி.டி.சி., கேட்டரிங் ஊழியர்கள் சங்கம் சார்பில்
சுற்றுலாத்துறை இயக்குனர் அலுவலகம் எதிரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நடந்தது.
சவரிமுத்து தலைமை தாங்கினார். பாலு, தமிழரசன், முத்தாலு முன்னிலை
வகித்தனர். பாலமோகனன், புகழேந்தி, ஆனந்தராசன், இளங்கோவன், வேலய்யன்,
கங்காதரன், ஜெயமுருகன், ரங்கநாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி
பேசினர். ஆர்ப்பாட்டத்தில், பெண் துப்புரவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு
வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிரேடு ஊதிய நிலுவைத்
தொகையை முன் தேதியிட்டு வழங்க வேண்டும். கோரிமேடு சீகல்ஸ் நெடுஞ்சாலை
உணவகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டன.