ADDED : ஆக 24, 2011 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த அடையாளம்
தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மறைமலையடிகள் சாலை
சாராயக் கடை அருகில் கடந்த மாதம் 24ம் தேதி சக்திவேல், 30; என்பவர் உடல்
நிலை சரியின்றி மயங்கி கிடந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு
மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். அவர் யார், எந்த ஊர்
என்ற விபரம் தெரியவில்லை. இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் 0413-2205657 என்ற
தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு உருளையன்பேட்டை போலீசார் கேட்டுக்
கொண்டுள்ளனர்.