/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய விளையாட்டு போட்டிக்கு வீரர்கள் தேர்வு
/
தேசிய விளையாட்டு போட்டிக்கு வீரர்கள் தேர்வு
ADDED : ஆக 24, 2011 12:05 AM
புதுச்சேரி : தேசிய அளவில் நடக்கவுள்ள விளையாட்டுப் போட்டிகளில்
பங்கேற்பதற்காக பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தகுதித் தேர்வு நேற்று
துவங்கியது.
தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்
அடுத்த மாதம் நடக்க உள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக, புதுச்சேரி
மண்டல அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தகுதித்தேர்வு நேற்று துவங்கியது.
உப்பளம் மைதானத்தில் நூறு மீட்டர் ஓட்டம், வாலிபால், ஹாக்கி, பூப்பந்து,
டென்னிஸ் மற்றும் தடகளப் போட்டிகளும், மொரட்டாண்டி பல்மைரா மைதானத்தில்
கிரிக்கெட் தகுதித்தேர்வும், பெத்தி செமினார் பள்ளி வளாகத்தில் ஸ்கேட்டிங்
தேர்வும் நடந்தது. தகுதித் தேர்வை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்திட்ட
இணை இயக்குனர் முத்துவேலன் துவக்கி வைத்தார். புதுச்சேரி மட்டுமின்றி
காரைக்கால், ஏனாம் மற்றும் மாகியிலும் நேற்று இந்த தகுதித்தேர்வு நடந்தது.
தேர்வில் 1500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 14 வயதிற்குட்பட்டோர் (8ம்
வகுப்பு வரை), 17 வயதிற்குட்பட்டோர் (10ம் வகுப்பு வரை), 19
வயதிற்குட்பட்டோர் (12ம் வகுப்பு வரை) என 3 பிரிவுகளில் மாணவர்கள் தேர்வு
செய்யப்பட்டனர். நான்கு பிராந்தியங்களிலும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு
வரும் 27ம் தேதி இறுதி கட்ட தகுதி தேர்வு நடக்கிறது.