/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
/
விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : செப் 30, 2011 01:56 AM
திருபுவனை : கண்டமங்கலத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஒரே நேரத்தில்
வேட்பாளர்கள் குவிந்ததால் புதுச்சேரி விழுப்புரம் சாலையில் போக்குவரத்து
பாதிப்பு ஏற்பட்டது.தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு
மனு தாக்கல் நேற்று கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.
வேட்புமனு
தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் தங்களின்
ஆதரவாளர்களுடன் பல்வேறு வாகனத்தில் அலுவலகத்தின் முன் குவிந்தனர்.
வாகனங்கள் சாலையில் முழுவதும் நிறுத்தபட்டது. மேலும், வேட்பாளர்கள்
ஆதரவாளர்களுடன் அலுவலகத்தைச் சுற்றி வளம் வந்ததால் அப்பகுதியில்
போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கண்டமங்கலம் போலீசார் போக்குவரத்தை சரி
செய்தனர். இதனால் புதுச்சேரி விழுப்புரம் சாலையில் சில மணிநேரம்
போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

