sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதிய வாக்காளராக விண்ணப்பித்தவர்கள் இடைத் தேர்தலில் ஓட்டு போட முடியாது

/

புதிய வாக்காளராக விண்ணப்பித்தவர்கள் இடைத் தேர்தலில் ஓட்டு போட முடியாது

புதிய வாக்காளராக விண்ணப்பித்தவர்கள் இடைத் தேர்தலில் ஓட்டு போட முடியாது

புதிய வாக்காளராக விண்ணப்பித்தவர்கள் இடைத் தேர்தலில் ஓட்டு போட முடியாது


ADDED : செப் 30, 2011 01:56 AM

Google News

ADDED : செப் 30, 2011 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதியில், புதிய வாக்காளர்களாக சேர விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்க போதிய கால அவகாசம் இல்லாததால், தேர்தல் முடிந்த பிறகே விசாரணைக்கு உட்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 1.1.2011ம் தேதியை வாக்காளர் தகுதி பெறும் நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் 5.1.2011ல் வெளியிடப்பட்டது. இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு, வேட்பு மனு தாக்கல் செய்யும் இறுதி நாள் (செப். 26ம் தேதி) வரை வாக்காளர் பட்டியல் தொடர்ந்து திருத்தப்படும் என, தலைமைத் தேர்தல் அதிகாரி பெலாட்டீ பெர்டின் கூறியிருந்தார். அதன்பேரில், இந்திரா நகர் தொகுதியில் புதிய வாக்காளர்களாகச் சேர, 143 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீதான விசாரணை நடத்த போதிய அவகாசம் இல்லாததால், மேற்படி விண்ணப்பங்கள் இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தல் முடிந்த பின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என, அத் தொகுதிக்கான வாக்காளர் பதிவு அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, புதிய வாக்காளராகச் சேர விண்ணப்பித்தவர்கள், இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us