தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விவேகானந்தா சி.பி.எஸ்.இ., பள்ளியில் 'தினமலர்' வினாடி வினா போட்டி

விவேகானந்தா சி.பி.எஸ்.இ., பள்ளியில் 'தினமலர்' வினாடி வினா போட்டி

விவேகானந்தா சி.பி.எஸ்.இ., பள்ளியில் 'தினமலர்' வினாடி வினா போட்டி


ADDED : டிச 16, 2024 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2024 05:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அய்யங்குட்டிப்பாளையம் விவேகானந்தா சி.பி.எஸ்.இ., பள்ளியில், தினமலர் பட்டம் இதழ் சார்பில் வினாடி வினா போட்டி நடந்தது.

புதுச்சேரி 'தினமலர் பட்டம்' இதழ் மற்றும் ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் பரிசு வெல்' என்ற மெகா வினாடி வினா போட்டி நடக்க உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க, பள்ளி அளவிலான அணிகள் தேர்வு செய்யும் போட்டி, அய்யங்குட்டிப்பாளையம் விவேகானந்தா சி.பி.எஸ்.இ., பள்ளி நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் மேனகா தலைமை தாங்கினார். வினாடி வினா போட்டியில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 400 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முதல் நிலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 16 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தேர்வாகினர்.

தலா 2 பேர் கொண்ட 8 அணிகள் இறுதி சுற்றில் பங்கேற்றது. இதில், 9ம் வகுப்பு மாணவர் ஜகத்ரக்சன், பிளஸ் 1 மாணவி அபிதாலட்சுமி முதலிடம் பிடித்தனர்.

9ம் வகுப்பு மாணவன் விஷ்ணுபிரவின், பிளஸ் 1 மாணவி வைஷ்ணவி இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி அளவில் தேர்வான இரு அணிகளும், மெகா வினாடி வினா போட்டியில் பங்கேற்க தேர்வாகியது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us