/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ புதுச்சேரியில் ஆக., 8 முதல் 11ம் தேதி வரை கோலாகலம்
/
தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ புதுச்சேரியில் ஆக., 8 முதல் 11ம் தேதி வரை கோலாகலம்
தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ புதுச்சேரியில் ஆக., 8 முதல் 11ம் தேதி வரை கோலாகலம்
தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ புதுச்சேரியில் ஆக., 8 முதல் 11ம் தேதி வரை கோலாகலம்
ADDED : ஜூலை 31, 2025 04:01 AM
புதுச்சேரி:'தினமலர்' ஸ்மார்ட் எக்ஸ்போ என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகம் பொங்கும். தீராத 'ஷாப்பிங்' வேட்கையில் இருக்கும் புதுச்சேரி மக்களுக்கு, விதவிதமாய் விருந்து படைக்கும் வகையில், மீண்டும் 'தினமலர்' சார்பில் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ-2025 மாபெரும் வீட்டு உபயோக பொருட்களின் நுகர்வோர் கண்காட்சி வரும் ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.
புதுச்சேரி, உப்பளம் புதிய துறைமுக வளாகத்தில் நடக்கும் இந்த கண்காட்சியில், பொதுமக்களின் இல்லக் கனவுகளையும், வாகனம் வாங்கும் விருப்பங்களையும் நிறைவேற்றும் வகையில், பில்ட் எக்ஸ்போ மற்றும் ஆட்டோ மொபைல்ஸ் எக்ஸ்போவும் இணைந்து நடத்தப்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளாக, 'தினமலர்' நடத்தும் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியில், புதுச்சேரி மட்டுமின்றி, கடலுார், விழுப்புரம், கள்ளக் குறிச்சி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, குடும்பத்தோடு குதுாகலத்தை அனுபவித்து மகிழ்ந்துள்ளனர்.
அந்த மகிழ்ச்சியை, இன்னும் இரட்டிப்பாக்கித் தரும் வகையில், இந்த ஆண்டு கண்காட்சியில், கலர் புல்லான, கலக்கலான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கண்காட்சியில், சர்வதேச அளவிலான தயாரிப்பு நிறுவனங்கள், இந்தியாவின் பிரபலமான நிறுவனங்கள் சார்பில், நேரடியாக அரங்கங்கள் அமைக்கப்படவுள்ளன. வெளிநாடுகள், வெளிமாநிலங்களை சேர்ந்த உற்பத்தியாளர்கள், கைவினைக் கலைஞர்கள் பலரும் கண்காட்சியில் தங்கள் பொருட்களை அதிரடி சலுகை விலைகளில் விற்பனை செய்யவுள்ளனர்.
அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் தள்ளுபடி விலையில் அள்ளி செல்ல இன்னும் 7 நாட்கள் காத்திருங்கள்.

