தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கிருமாம்பாக்கம், வில்லியனுாரில் கணினி பயிற்சிக்கு நேரடி சேர்க்கை

கிருமாம்பாக்கம், வில்லியனுாரில் கணினி பயிற்சிக்கு நேரடி சேர்க்கை

கிருமாம்பாக்கம், வில்லியனுாரில் கணினி பயிற்சிக்கு நேரடி சேர்க்கை


ADDED : ஜூன் 10, 2025 10:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2025 10:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி; கிருமாம்பாக்கம் மற்றும் வில்லியனுாரில் இயங்கி வரும் கணினி பயிற்சி மையத்தில், வரும் 30ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடக்கிறது.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் ராகிணி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் வில்லியனுார் மற்றும் கிருமாம்பாக்கம் ஆகிய இடங்களில் கணினி பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் தேசிய திறந்தவெளிப் பள்ளி நிறுவனத்தின் அங்கிகாரத்துடன், பல்வேறு வகையான ஆறு மாத தொழிற்சார்ந்த கணினி பயிற்சி வகுப்புகள் பகுதி நேர முறையில் நடத்தப்படுகின்றது.

இக்கணினி பயிற்சிக்கான சேர்க்கைக்கு புதுச்சேரி மாநிலத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் வரும் 30ம் தேதிவரை கணினி பயிற்சி மையங்களில் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.

எனவே, விருப்பம் உள்ளவர்கள் அருகாமையில் உள்ள கணினி பயிற்சி மையங்களை தொடர்பு கொண்டு இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு 0413- 2666767, 2611776 ஆகிய தொலைபேசி எண்களில் வில்லியனுார் மற்றும் கிருமாம்பாக்கம் கணினி பயிற்சி மையங்களை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us