/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி அரசு ஐ.டி.ஐ.,க்களில் நேரடி மாணவர் சேர்க்கை
/
புதுச்சேரி அரசு ஐ.டி.ஐ.,க்களில் நேரடி மாணவர் சேர்க்கை
புதுச்சேரி அரசு ஐ.டி.ஐ.,க்களில் நேரடி மாணவர் சேர்க்கை
புதுச்சேரி அரசு ஐ.டி.ஐ.,க்களில் நேரடி மாணவர் சேர்க்கை
ADDED : ஆக 06, 2025 08:05 AM
புதுச்சேரி : புதுச்சேரி அரசு ஐ.டி.ஐ.,க்களில் நேரடி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
இது குறித்து புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அழகானந்தம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதுச்சேரி அரசு ஐ.டி.ஐ.,க்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்பட்டு சேர்க்கை முடிவடைந்தது. தற்போது காலியாக உள்ள தொழிற்பயிற்சி பிரிவுகளுக்கான நேரடி சேர்க்கை நடந்து வருகிறது.
புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டர், எலக்ட்ரீசியன், ஏசி டெக்னீசியன், மோட்டார் வாகன மெக்கானிக், ஒயர் மேன் வெல்டர் கட்டடம் கட்டுபவர், மின்சார வாகன மெக்கானிக் மற்றும் ட்ரோன் டெக்னீசியன் போன்ற பயிற்சி பிரிவுகளுக்கான நேரடி சேர்க்கை நடந்து வருகிறது.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற அல்லது தவறிய, எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் மாற்றுச் சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், ஆகிய சான்றிதழ்களுடன் நேரடியாக அரசு ஆண்கள் தொழிற்பெயர்ச்சி நிலைய முதல்வரை சந்தித்து உடனடி சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம்.
இதேபோல் புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலையம், வில்லியனுார் அரசு தொழிற்பயிற்சி நிலையம், பாகூர் அரசு தொழிற்பெயர்ச்சி நிலையம் மற்றும் நெட்டப்பாக்கம் அரசு தொழில் பயிற்சி நிலையம் ஆகிய தொழிற் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பயிற்சி பிரிவுகளுக்கான நேரடி சேர்க்கை நடந்து வருகிறது.
ஆகவே பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் அந்தந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் முதல்வரை நேரில் சந்தித்து உடனடியாக சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம்.
நீங்கள் வரும் தேதியில் காலியிடங்கள் உள்ள பயிற்சி பிரிவுகளுக்கு மட்டும் சேர்க்கைக்கான வாய்ப்பு அளிக்கப்படும். முதலில் வரும் மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த உடனடி சேர்க்கை இம்மாதம் 30 ஆம் தேதி வரை நடக்கிறது. தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவச சீருடை, மதிய உணவு மற்றும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.