/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காஸ் மானியத்திற்கு விபரங்கள் நேரடியாக சேகரிப்பு: ஆன்லைனில் பதிவு செய்ய நுகர்வோருக்கு அறிவிப்பு
/
காஸ் மானியத்திற்கு விபரங்கள் நேரடியாக சேகரிப்பு: ஆன்லைனில் பதிவு செய்ய நுகர்வோருக்கு அறிவிப்பு
காஸ் மானியத்திற்கு விபரங்கள் நேரடியாக சேகரிப்பு: ஆன்லைனில் பதிவு செய்ய நுகர்வோருக்கு அறிவிப்பு
காஸ் மானியத்திற்கு விபரங்கள் நேரடியாக சேகரிப்பு: ஆன்லைனில் பதிவு செய்ய நுகர்வோருக்கு அறிவிப்பு
ADDED : செப் 30, 2023 04:55 AM
புதுச்சேரி - காஸ் மானிய திட்டத்தை, மக்களிடம் நேரடியாக தகவல் பெற்று செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, நுகர்வோர்கள் தங்கள் இணைப்பு விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய குடிமைப்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
முதல்வர் ரங்கசாமி, கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, வீட்டு உபயோக காஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும் என அறிவித்தார்.
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இத்திட்டத்தை செயல்படுத்த குடிமைப்பொருள் வழங்கல் துறை கடந்த ஜூலை மாதம் அரசாணை வெளியிட்டது.
அதன்படி சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.300ம், மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.150 வழங்கப்படும்.
இந்த மானியம் மாதம் ஒரு சிலிண்டர் வீதம் ஆண்டிற்கு 12 சிலிண்டருக்கு வழங்கப்படும். மானியத் தொகை, நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், அரசாணை வெளியிட்டு 2 மாதமாகியும், இதுவரை காஸ் மானியம் வழங்கப்படவில்லை.
எண்ணெய் நிறுவனங்கள் வழங்கிய, காஸ் இணைப்புதாரர் பட்டியலில், ஆதார் எண் இல்லாததால் மானியத் தொகையை வங்கி கணக்குகளில் செலுத்த முடியவில்லை.
அதனால், மாநிலத்தில் ஆதார் எண்ணுடன் காஸ் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் பட்டியலை, மத்திய பெட்ரோலிய இயற்கை எரிவாயு அமைச்சகத்திடம் அரசு கேட்டுள்ளது. ஆனால், அந்த பட்டியலை தயாரிப்பதில் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.
அதுவரை காத்திருக்காமல், மக்களிடம் நேரடியாக காஸ் இணைப்பு விபரங்களை பெற்று, மானியத்தை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
எனவே மாநிலத்தில் காஸ் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்கள் தங்களுடைய இணைப்புகள் பற்றி விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என குடிமை பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
எப்படி பதிவு செய்வது
காஸ் இணைப்பு பெற்ற நுகர்வோர் இணையதளம் மற்றும் செயலி வழியாக பதிவு செய்யலாம்.
தங்களுடைய பிராந்தியம், காஸ் ஏஜென்சி பெயர், நுகர்வோர் எண், தொலைபேசி எண்,ரேஷன் கார்டு எண், ஆதார் எண் விபரங்களை htps//pdsswo.py gov.in/lpg என்ற இணைய முகவரி அல்லது https://pdsswo.py.gov.in/helpdesk மற்றும் https://dcsca.py.gov.in என்ற இணைப்பில் மொபைல் செயலி மூலமாகவும் பதிவு செய்யலாம் என்றார்.
ெஹல்ப் டெஸ்க்
நுகர்வோரிடம் பெறப்படும் காஸ் சிலிண்டர் பதிவு தகவல்களை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் டெலிவரி சிலிண்டர் பட்டியலை இணைத்து, காஸ் மானியம் வங்கி கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அறிவித்தப்படி ஜூலை மாதம் முதல் சிலிண்டர் வாங்கியவர்களுக்கு மானியம் கிடைக்கும். காஸ் இணைப்பு பற்றிய பதிவு செய்யும் மக்களுக்கு உதவுவதற்காக ெஹல்ப் டெஸ்க் உருவாக்கப்பட்டுள்ளது. உதவிக்கு 99440 52612, 99440 52718 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.