/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அவசர மருத்துவ சங்க மாநாட்டில் புது தொழில்நுட்பம் குறித்த விவாதம்
/
அவசர மருத்துவ சங்க மாநாட்டில் புது தொழில்நுட்பம் குறித்த விவாதம்
அவசர மருத்துவ சங்க மாநாட்டில் புது தொழில்நுட்பம் குறித்த விவாதம்
அவசர மருத்துவ சங்க மாநாட்டில் புது தொழில்நுட்பம் குறித்த விவாதம்
ADDED : அக் 18, 2024 06:23 AM

புதுச்சேரி: அவசர மருத்துவ சங்க மாநாட்டில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி, தமிழ்நாடு, புதுச்சேரி அவசர மருத்துவ சங்கம் சார்பில், 3ம் ஆண்டு அவசர மருத்துவ சங்க மாநில மாநாடு நடந்தது. இந்தியா முழுவதிலும் இருந்து நிபுணர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநில நாட்டினை ரமேஷ் எம்.எல்.ஏ., கலெக்டர் குலோத்துங்கன், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஷில்பா பிரபாகர் சதிஷ், ராஜா, முத்தம்மா, அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள், டாக்டர் ரகுநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து நடந்த மாநாட்டில் அவசர மருத்துவ சிகிச்சை, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநாடு இன்று 17ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை தமிழ்நாடு, புதுச்சேரி மருத்துவ சங்கத்தின் செயலாளர் சுரேந்தனர் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.