/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வியாபாரிகள் கூட்டமைப்பு கவர்னருடன் கலந்துரையாடல்
/
வியாபாரிகள் கூட்டமைப்பு கவர்னருடன் கலந்துரையாடல்
ADDED : அக் 23, 2024 04:35 AM

புதுச்சேரி : புதுச்சேரி வியாபாரிகள் கூட்டமைப்பின் கீழ் செயல்படும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி 92 வியாபாரிகள் சங்கங்களின் நிர்வாகிகள், கூட்டமைப்பு தலைவர் சிவசங்கரன் தலையில் சந்தித்துப் பேசினர்.
அதில், சிவசங்கரன் எம்.எல்.ஏ., புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக நியாயவிலை கடைகள் மூலமாக அரிசி வழங்குதல், கோயில் நில மீட்பு விவகாரத்தில் நடவடிக்கை, புதிய தொழிற்சாலைகள் கொண்டுவதற்கான முயற்சிகளை கவர்னர் மேற்கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரியின் சமூக, பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளில் வியாபாரிகள் கூட்டமைப்பு அரசுக்கு உறுதுணையாக செயல்படும் என்றார்.
தொடர்ந்து, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், மேட்டுப் பாளையம் லாரி முனையத்தில் சரக்கு கிடங்குகள் அமைக்க வேண்டும். புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள 20 சதவீத ஜிஎஸ்டி வரி உச்ச வரம்பை 40 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதற்கு, கவர்னர் கைலாஷ்நாதன் வியாபாரிகள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து முதல்வர், துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.