கிருமாம்பாக்கம் அருகே தீ விபத்து ரூ. 2 லட்சம் பொருட்கள் சேதம்
கிருமாம்பாக்கம் அருகே தீ விபத்து ரூ. 2 லட்சம் பொருட்கள் சேதம்
ADDED : செப் 25, 2026 10:03 PM
பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே மின் கசிவு காரணமாக வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
கிருமாம்பாக்கம் அடுத்த மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 52. இவரது வீட்டில் நேற்று மாலை 6:30 மணியளவில், மின் கசிவு காரணமாக ஒயர்கள் தீப்பிடித்து எரிந்தன.
அதிலிருந்து தீ பரவி வீட்டில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் இருந்த சுப்ரமணியனின் குடும்பத்தினர் அலறியடித்து வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர்.
தகவலறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய அதிகாரி மாயக்கிருஷ்ணன், முன்னனி தீயணைப்பு வீரர் சசிக்குமார், பாலச்சந்தர் உள்ளிட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இதில், வீட்டில் இருந்த பீரோ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட 2ம் லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இச்சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
