/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பணி நீக்க ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
/
பணி நீக்க ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
ADDED : பிப் 13, 2024 04:48 AM

புதுச்சேரி: பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் மூன்று நாள் கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று துவங்கியது.
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலையும், மாதம் ரூ. 10,500 சம்பளம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் கூட்டத்தில் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை நிறைவேற்றி மீண்டும் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்டக்குழு சார்பில் தொடர் கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று துவங்கியது.
சுதேசி மில் அருகில் துவங்கிய போராட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன், காரைக்கால் வினோத், மணிவண்ணன் தலைமை தாங்கினர்.
இதில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்று உரையாற்றினர். நாளை 14ம் தேதி வரை இந்த போராட்டம் நடக்கிறது.