தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொகுதி வாரியாக ஓட்டுச்சாவடிக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

 தொகுதி வாரியாக ஓட்டுச்சாவடிக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

 தொகுதி வாரியாக ஓட்டுச்சாவடிக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு


ADDED : ஏப் 09, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 05:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தல் இன்று நடக்க உள்ள நிலையில், ஓட்டு பதிவு இயந்திரங்கள் நேற்று ஓட்டுச் சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது.

இதற்காக மாநிலம் முழுதும் 30 தொகுதிகளில் 1099 ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த 30 தொகுதிகளிலும் 1099 மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள், 1099 கட்டுப்பாட்டு கருவி, 1099 வி.வி.,பாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

ஓட்டு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தாகூர் கலை கல்லுாரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக், மகளிர் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள மூன்று ஓட்டு எண்ணிக்கை மையத்தின் ஸ்ட்ராங் ரூமிற்கு மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.இந்த இயந்திரங்கள் வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் திறக்கப்பட்டு, நேற்று (8 ம்தேதி)காலை 11:00 மணி முதல் தொகுதி வாரியாக ஓட்டுச்சாவடிகளுக்குபலத்த போலீஸ் பாதுகாப்புடன்பிரித்து அனுப்பும் பணி நடந்தது. ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஏற்றி சென்ற அனைத்து வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., வசதி, வழி நெடுக்கிலும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

புதுச்சேரி மாவட்டத்தில் 918 மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள், 918 கட்டுப்பாட்டு கருவிகள், 918 வி.வி.,பாட் அனுப்பப்பட்டன.

இது மட்டுமின்றி அவசர சூழ்நிலையை சமாளிக்க 364 மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள், 364 கட்டுப்பாட்டு கருவி, 459 வி.வி., பாட் இருப்பு தயாராக வைக்கப்பட்டுள்ளன. காரைக்கால் மாவட்டத்திற்க தலா 181 மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி., பாட் அனுப்பி வைக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us