ADDED : ஜூன் 01, 2026 09:30 AM
வில்லியனுார்: வில்லியனுார் அருகே பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட தகராறில், இருவரை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த மங்கலம் பகுதியை சேர்ந்தவர் முரளி, 24. இவரது உறவினர் லட்சுமணசாமி ஏம்பலம் மெயின்ரோட்டில் அரிமா ஏஜன்சிஸ் என்ற பெயரில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.
கடந்த 29ம் தேதி இரவு உறுவையாறை சேர்ந்த பிரதாப் மற்றும் அவரது நண்பர் ஜோ ஆகியோர் பைக்கில் வந்து பெட்ரோல் நிரப்பிக்கொண்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர்.
பங்கில் இருந்த முரளி மற்றும் லட்சுமணசாமி ஆகியோர் தடுத்து நிறுத்தி பெட்ரோலுக்கான பணத்தை கொடுத்துவிட்டு செல்லுமாறு கேட்டனர்.
இதனால் இருதரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது. பின், பெட்ரோலுக்கான பணத்தை பிரதாப் கொடுத்துவிட்டு மிரட்டல் விடுத்து சென்றார்.
சிறிது நேரத்தில் முரளி மற்றும் அவரது உறவினர் கிருஷ்ணராஜ் ஆகியோர் பைக்கில் அரியூர் நோக்கி சென்றனர்.
இதனை கண்ட பிரதாப், ஜோ மற்றும் நண்பர்கள் சிலருடன் பின் தொடர்ந்து சென்று புதிய பைபாஸ் சாலையில் வழிமறித்து இருவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு, தப்பிச்சென்றனர்.
அவ்வழியாக சென்ற வர்கள் ரத்த காயங் களுடன் கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து முரளி கொடுத்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் உறுவையாரை சேர்ந்த பிரதாப், ஜோ, வல்லரசன், பச்சையப்பன் மற்றும் சிலர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
