/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் தகராறு: 2 பேர் கைது
/
பொது இடத்தில் தகராறு: 2 பேர் கைது
ADDED : அக் 12, 2024 03:33 AM
புதுச்சேரி : உருளையன்பேட்டை, ரெட்டியார்பாளையம் பகுதியில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கிட்லா சத்யநாராயணா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மகாலட்சுமி நகர் மாஸ் ஹோட்டல் பின்புறம் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர், உப்பளம், கன்னிபாய் தோட்டத்தை சேர்ந்த ஐசாக் அம்பர், 22; என்பது தெரியவந்தது. இதயைடுத்து, பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதாக ஐசாக் அம்பர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.
இதேபோல், உழவர்கரை, குண்டுசாலை மெயின் ரோடு, தனியார் ஒயின்ஷாப் அருகே குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த அதேப் பகுதியை சேர்ந்த ஹேமச்சந்திரன், 21; என்பவரை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்தனர்.