தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொது இடத்தில் தகராறு: 4 பேர் கைது

பொது இடத்தில் தகராறு: 4 பேர் கைது

பொது இடத்தில் தகராறு: 4 பேர் கைது


ADDED : அக் 11, 2024 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2024 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை, ரெட்டியார்பாளையத்தில் பொது இடத்தில் தகராறில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

லாஸ்பேட்டை உதவி சப் இன்ஸ்பெக்டர் புஷ்பலிங்கம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, தாகூர் கலை கல்லுாரி மைதானம் அருகே குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட விழுப்புரம், அனுமந்தை, கீழ்பேட்டையை சேர்ந்த சிவக்குமார், 46: கைது செய்தனர்.

இதேபோல், லாஸ்பேட்டை விமான நிலையம் அருகே தகராறில் ஈடுபட்ட கிருஷ்ண நகர், 7 வது குறுக்கு தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் 63; இ.சி.ஆர் தனியார் ஓயின்ஷாப் அருகே தகராறில் ஈடுபட்ட சாந்தி நகர், பாரதிதாசன் வீதியை சேர்ந்த லோகநாதன், 29; ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், மூலக்குளம் ஜான்குமார் நகர் அருகே தகராறில் ஈடுபட்ட தருமபுரியை சேர்ந்த தினேஷ், 32; என்பரை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us